லூக்கா 13: 10 – 21
உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய்
நம்முடைய திரியேக தேவனின் குணாதிசயங்கள் நமக்குத் தெரியும். அவருடைய வல்லமையைக் குறித்தும் ஓரளவு நமக்குத் தெரியும். ஆனால் அவர் எந்த நேரத்தில் எப்படி செயல்படுவார் என்பது மனிதர் யாருக்கும் தெரியாது. சில சமயங்களில் வியாதிகளை உடனே சுகப்படுத்திவிடுகிறார். சில சமயங்களில் காலம் தாமதித்தே சுகம் கொடுக்கிறார். இன்று வாசித்த பகுதியில் பதினெட்டு வருடங்களுக்குப் பின் சுகம் கிடைத்த ஒரு பெண்ணைக் குறித்து வாசிக்கிறோம். நீண்ட காலம் வியாதியாய் இருப்பவர்கள், கர்த்தர் என்னை மறந்துவிட்டார் என்று நினைக்க வேண்டாம். விடுதலை கிடைக்கும் நேரம் வரும். கூனியாய் இருந்த பெண் இயேசுவை நோக்கிக் கூப்பிட்டதாகக் கூட சொல்லப்படவில்லை. இயேசுவே வலிய அழைத்து அவளைச் சுகப்படுத்தினார். ஆண்டவரின் கருணை சில நேரங்களில் ஜெபத்திற்காகக் கூட காத்திருப்பதில்லை.
ஜெபம்:
ஆண்டவரே, நான் ஜெபத்தில் குறையுள்ளவன். விசுவாசத்தில் குறையுள்ளவன். என் பெலவீனங்கள் உமக்குத் தெரியும். என்னைக் குணமாக்கி பெலப்படுத்தும். ஆமென்.