காலைத் தியானம் – ஆகஸ்ட் 11, 2022

லூக்கா 13: 22 – 30

இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்  

                    ஆதாம், ஏவாள் உருவாக்கப்பட்ட நாட்களிலிருந்தே மனிதனுக்குத் தெரிந்தெடுக்கும் உரிமையைக் கர்த்தர் கொடுத்திருக்கிறார். அவர் மனிதரை இயந்திரங்களாக உருவாக்கவில்லை. விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசிப்பதா அல்லது புசியாமலிருப்பதா? தற்காலிக சிற்றின்பங்களைத் தெரிந்தெடுப்பதா அல்லது நம் கண்களுக்கு மறைக்கப்பட்டிருக்கும் நித்திய வாழ்வுக்கான நன்மைகளைத் தெரிந்து கொள்வதா? கவனமற்ற வாழ்க்கை உன்னைப் பரலோகத்துக்குக் கொண்டு செல்லாது. உணவில் கட்டுப்பாடு, உறக்கத்தில் கட்டுப்பாடு, உடையில் கட்டுப்பாடு, பேச்சில் கட்டுப்பாடு போன்றவைகள் நீ எந்த திசையில், எந்த வாசல் வழியாகப் போய்க்கொண்டிருக்கிறாய் என்பதைப் பிரதிபலிக்கும். இடுக்கமான வழியைத் தெரிந்துகொள்.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் எனக்குக் கொடுத்திருக்கும் தெரிந்தெடுக்கும் உரிமைக்காக நன்றி சுவாமி. நித்திய வாழ்வுக்கு வழிநடத்தும் இடுக்கமான வழியை விட்டு விலகாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.