காலைத் தியானம் – ஆகஸ்ட் 12, 2022

லூக்கா 13: 31 – 35

நான் மனதாயிருந்தேன், உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று 

                    தேவ அன்பைப் பற்றியும் தேவ கோபத்தைப் பற்றியும் இந்த வசனங்களில் வாசிக்கிறோம். தேவனுடைய அன்பு சலிப்படையாத அன்பு. நாம் இடுக்கமான வாசலைத் தெரிந்து கொள்வதற்காக அநேகத் தருணங்களைக் கொடுத்துக் கொண்டுக் கொண்டேயிருக்கும் அன்பு. ஆனால் அந்த அன்பையும் அன்பின் எச்சரிப்பையும் அசட்டை செய்து, அந்த அன்பின் அரவணைப்பிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டு ஓடிவிட்டால் தேவனுடைய கோபத்திற்கு தப்ப முடியாது என்பது நிச்சயம். உங்கள் வீடுகள் பாழாகிவிடும் என்பது எச்சரிப்பின் சத்தம். இஸ்ரவேலரின் வாழ்க்கையும் எருசலேமின் அழிவும் நமக்கு ஒரு எச்சரிப்பு.

ஜெபம்:

ஆண்டவரே, நான் பெலவீனன். உம்முடைய அன்பால் என்னை அரவணைத்து வழிநடத்தும். ஆமென்.