காலைத் தியானம் – ஆகஸ்ட் 13, 2022

லூக்கா 14: 1 – 14

உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும்

                    இன்று வாசித்த பகுதியிலிருந்து நமக்கு குறைந்த பட்சம் இரண்டு பாடங்கள் கிடைக்கின்றன. ஒன்று,  நமக்குத் தாழ்மை மனப்பான்மை வேண்டும். தாழ்வு மனப்பான்மை அல்ல. எங்கு சென்றாலும் மேடையில் தான் உட்காருவேன், அல்லது முன்வரிசையில் தான் உட்காருவேன் என்று நினைத்தால் உனக்குத் தாழ்மை மனப்பான்மை இல்லை என்று அர்த்தம்.  நீயே உன்னைத் தாழ்த்திக் கொள்ள பழகிக் கொள். தாழ்மை, பெருமைக்கு எதிர்மாறானது. தாழ்மையைத்தான் கர்த்தர் விரும்புகிறார். இரண்டாவதாக, கர்த்தருக்குப் பிரியமானவர்களுக்கு, அதாவது கர்த்தருடைய இருதயத்தில் தனி இடம் பெற்றவர்களுக்கு, நாம் விருந்து கொடுக்க வேண்டுமாம். யார் அந்த சிறப்புமிக்க மக்கள்? ஏழைகள், விதவைகள், பட்டினியாய் இருப்பவர்கள், ஊனர், குருடர் போன்றவர்கள்தான் அந்த சிறப்பு மக்கள். இவர்களுக்கு நாம் இரக்கம் காட்டினால் தேவனிடத்தில் நாம் இரக்கம் பெறுவோம். 

ஜெபம்:

ஆண்டவரே, பல விதமான தேவைகளோடு துன்பங்களை அனுபவித்து வரும் மக்களின் கண்ணீரைத் துடைக்க என்னை உபயோகியும். ஆமென்.