காலைத் தியானம் – ஆகஸ்ட் 14, 2022

லூக்கா 14: 15 – 24

அவர்களெல்லாம் போக்குச் சொல்லத் தொடங்கினார்கள்   

                    ஆண்டவர் கொடுக்கும் விருந்துக்குப் போகமாட்டேன் என்று சொல்கிறவர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஏனென்றால் உலகமும் ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணி வைத்துக்கொண்டு, எல்லாரையும் அழைக்கிறது. தொழிலில் லாபம், உத்தியோகத்தில் உயர்வு, பதவியில் உயர்வு போன்றவைகளே இவ்வுலகம் கொடுக்கும் விருந்து. இந்த விருந்தில், அடிப்படையில் தவறு ஒன்றும் இல்லையென்றாலும், அதில் நிரந்தரமான திருப்தி கிடைக்காது. மேலும் இந்த விருந்தின் சுவையில் மயங்கி விட்டவர்களுக்கு ஆண்டவர் கொடுக்கும் விருந்தைப் பற்றி நினைக்கவே நேரம் இருக்காது. ஆண்டவருடைய விருந்தை உதறித் தள்ளி விடாதே. தினமும் காலையில் வேதம் வாசித்து, அதைத் தியானித்து, உன் ஆண்டவரோடு தனித்து இருப்பதே ஒரு விருந்து தான். 

ஜெபம்:

ஆண்டவரே, உலகம் கொடுக்கும் விருந்தில் மயங்கி விடாமல் உம்முடைய விருந்தையே விரும்பி நாட எனக்குக் கிருபை தாரும். ஆமென்.