காலைத் தியானம் – ஆகஸ்ட் 15, 2022

லூக்கா 14: 25 – 34

செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?  

                    கிறிஸ்துவுக்கு சீஷராயிருக்கவேண்டும் என்றால், செல்லும் செலவு மிகவும் அதிகம்தான். கிறிஸ்துவுக்காக நம் உயிரையும் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிறிஸ்துவுக்கு சீஷனாயிருக்க ஆயத்தமா? அந்த அளவுக்கு நீ இயேசுகிறிஸ்துவை நேசிக்கிறாயா? கிறிஸ்துவுக்கு சீஷனாயிருப்பது ஒரு ’சாய்வு நாற்காலி’ வாழ்க்கை அல்ல. It is not an easy-chair life. ஆனால் அதை நினைத்து நாம் மலைக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நாம் நித்திய காலமாய் கிறிஸ்துவோடு இருக்கப்போகிறோம் என்பதை நினைக்கும் போது, நாம் விட்டுக் கொடுக்கும் சொகுசு வாழ்க்கை ஒரு பெரிய காரியம் அல்ல. வெளிப்படுத்தின விசேஷம் 3ஆம் அதிகாரம் 21 ஆம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஆசீர்வாதம் நம்முடைய மூளைக்கு எட்டாதது. மேலும் நாம் கிறிஸ்துவுக்காக துன்பங்களைச் சந்திக்க நேரிட்டாலும், அவற்றைக் கடந்து செல்ல நம் ஆண்டவர் பெலன் தருவார். 

ஜெபம்:

ஆண்டவரே, என் சுயபெலத்தினால் உமக்கு சீஷனாயிருக்க முடியாது என்பதை உணருகிறேன். கிருபையாய் எனக்குப் பெலன் தந்து என்னை வழி நடத்தும். ஆமென்.