காலைத் தியானம் – ஆகஸ்ட் 16, 2022

லூக்கா 15: 1 – 10

மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம்  

                    தவறான பாதையில் சென்றுவிட்ட ஒரு பிள்ளையைக் குறித்த வேதனையை, அதை அனுபவித்த அல்லது அனுபவிக்கிற பெற்றோர்களுக்கு மட்டும்தான் தெரியும். அப்படிப்பட்ட ஒரு பிள்ளை மனந்திரும்பி நேர் பாதைக்கு வரும்போது அந்தப் பெற்றோருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி அளவில்லாதது. ஒருவன் மனந்திரும்பும்போது, பரலோகத்தில் இருக்கும் நம்முடைய பரம தகப்பனுடைய மகிழ்ச்சியும் அப்படிப்பட்டது தான். நூற்றுக்கணக்கானோர் இரட்சிக்கப்படும்படி ஒரு பெரிய கூட்டத்தில் பிரசங்கிப்பது மட்டுமே சுவிசேஷம் அறிவிக்கும் வழியில்லை. தனிப்பட்ட ஒருவனுக்கு சுவிசேஷம் சொல்லி, ஒரே ஒரு பாவி மனந்திரும்புவதற்கு ஏதுவாயிருந்தாலும் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிருக்கும். நீ சந்திக்கும் ஒவ்வொரு இரட்சிக்கப்படாத மனிதனும் சுவிசேஷம் அறிவிக்கும் படி உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சுவிசேஷ தளம். 

ஜெபம்:

ஆண்டவரே, உம்மை அறியாத என் நண்பர்களில் ஒருவருக்காது இன்று நான் உம்மைக் குறித்தும், இரட்சிப்பைக் குறித்தும் பேசும் வாய்ப்பைத் தாரும். ஆமென்.