காலைத் தியானம் – ஆகஸ்ட் 17, 2022

லூக்கா 15: 11 – 24

துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணி தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான் 

                    துன்மார்க்கமாய் வாழ்ந்தால் செல்வமும் சொத்துக்களும் அழிந்து போவது நிச்சயம். இதை நாம் அநேகர் வாழ்க்கையில் பார்த்திருக்கிறோம் அல்லவா? நம்மை உருவாக்கி, காத்து, வழி நடத்தி வரும் தேவன் நமக்குத் தேவையான சொத்துக்களை கொடுத்திருக்கிறார். சொத்து என்பது பொருளை மாத்திரம் குறிப்பதல்ல. நம் குடும்பம், நண்பர்கள், நம்முடைய தாலந்துகள் போன்றவை கூட ஆண்டவர் நமக்குக் கொடுத்துள்ள சொத்துதான். துன்மார்க்க வாழ்க்கை வாழ்ந்து உன் சொத்தில் எதையாவது அழித்துப் போடாதே. ஒருவேளை உன் குடும்பத்தில் யாராவது துன்மார்க்க வாழ்க்கை வாழ்ந்து சொத்துக்களை அழித்திருந்தால், அந்த குடும்ப உறுப்பினரின் மனந்திரும்புதலுக்கும், இழந்த சொத்துக்களைக் கர்த்தர் திரும்பக் கொடுக்கவும் விசுவாசத்தோடு ஜெபம் செய். கர்த்தரால் முடியாதது ஒன்றுமில்லை.

ஜெபம்:

ஆண்டவரே, துனமார்க்க வாழ்க்கை வாழும் என் நண்பரும் குடும்ப உறுப்பினரும் இரட்சிக்கப்படும்படி அவர்களுடைய இருதயங்களை ஆயத்தப்படுத்தும். ஆமென்.