காலைத் தியானம் – ஆகஸ்ட் 18, 2022

லூக்கா 15: 25 – 32

உம்முடைய குமாரனாகிய இவன் . . . . உன் சகோதரனாகிய இவன் 

                    ஒருவன் உலகத்தின் பார்வையில் மிகவும் சிறந்து விளங்கினால், எல்லாரும் சொந்தம் கொண்டாடுவார்கள். அதேசமயம் ஒருவன் ஒன்றுக்கும் உதவாதவன் அல்லது தீயவன் என்று கருதப்பட்டால், அவனுடைய குடும்பத்தினர் கூட அவனை விட்டு தூரமாய் விலகிப் போய்விடுகிறதைக் காண்கிறோம். இன்று வாசித்த உவமையில் மூத்த மகன் இளையவனைத் தன் சகோதரன் என்று கூட ஏற்றுக் கொள்ள மனம் இல்லாதவனாயிருந்தான். ஆகையால் தன் தம்பியைக் குறித்து தகப்பனிடத்தில் பேசும் போது, ‘உம்முடைய குமாரன்’ என்று சொல்லுகிறான். தகப்பன் மூத்த குமாரனுடைய தவறான மனநிலையை உணர்த்தும்படி, ‘உன் சகோதரன்’ என்கிறார். தீயவழியில் சென்றுகொண்டிருக்கும் யாரையாவது பார்த்தால், அதைப்பற்றி எனக்கென்ன என்று நினைத்து விலகிப் போய்விடுகிறாயோ? அவன் உன் சகோதரன். அவனை நல்வழிக்குக் கொண்டு வருவதில் உனக்கு அக்கறை இருக்க வேண்டும்.

ஜெபம்:

ஆண்டவரே, தீய வழியில் சென்றுகொண்டிருக்கும் என் சகோதரனுக்காக ஜெபிக்கும் வாஞ்சையை எனக்குத் தாரும். ஆமென்.