காலைத் தியானம் – ஆகஸ்ட் 20, 2022

லூக்கா 16: 11 – 18

எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது 

                    இங்கு ஊழியக்காரன் என்பது அந்தக் காலத்தில் இருந்த அடிமையைக் குறிக்கும். அடிமையானவன் எஜமானின் தனிச்சொத்து (exclusive property). முழு நேரமும் தன் எஜமானையே சேவிக்க வேண்டும். அந்த விதமாகவே கிறிஸ்தவன் ஒவ்வொருவனும் கிறிஸ்துவின் அடிமை. பவுல் அப்போஸ்தலன் தன்னை கிறிஸ்துவின் அடிமை என்று தான் கூறுகிறார். ஆலயத்தில் கிறிஸ்துவைத் தொழுது கொள்ளும்போது மாத்திரமல்ல, அலுவலகத்தில் வேலை செய்யும்போதும் நீ கிறிஸ்துவின் அடிமை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நீ கிறிஸ்துவைத் தவிர வேறே யாருக்கு அல்லது எதற்கு ஊழியம் செய்கிறாய்?

ஜெபம்:

ஆண்டவரே, நான் உமது அடிமை. முழு நேரமும் உமக்கே சொந்தம். உலகம் என்னை இழுத்துக் கொள்ளாதபடி பார்த்துக் கொள்ளும். ஆமென்.