காலைத் தியானம் – ஆகஸ்ட் 22, 2022

லூக்கா 17: 1 – 10

செய்ய வேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் 

                    பாராட்டுதலை விரும்புவது மனித இயல்பு. மனித உள்ளம் பாராட்டுதலுக்காக ஏங்குகிறது என்று கூட சொல்லலாம். ஆனால் ஒரு காரியத்தை எவ்வளவு சிறப்பாகச் செய்தாலும் சிலர் பாராட்டவே மாட்டார்கள். உனக்குப் பாராட்டுதல் கிடைக்காவிட்டால் சோர்ந்து போய்விடாதே. சமுதாய நலத் தொண்டுகளில் ஈடுபடும் ஒரு சிலருக்கு பலவிதமான சர்வதேச விருதுகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் அவர்களை விட கடினமான சூழ்நிலையில் வெகுவாய் உழைக்கிற அநேகரின் வேலை யாருக்கும் தெரியாமலேயே போய் விடுகிறது. நம்மைப் பாராட்டுவதற்கு ஒருவர் இருக்கிறார். அவர் நம் செயல்களையெல்லாம் கவனித்துக் கொண்டேயிருக்கிறார். அவரிடமிருந்து பாராட்டுதல் பெறுவது தான் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். உன் பரம தகப்பன் பாராட்டும்படி நீ செயல்படுகிறாயா?

ஜெபம்:

ஆண்டவரே, என் பூலோக வாழ்க்கையின் முடிவில், நன்றாக செயல்பட்டாய் என் உண்மையுள்ள ஊழியக்காரனே, என்று உம்முடைய பாராட்டுதலைப் பெற எனக்குக் கிருபை தாரும். ஆமென்.