காலைத் தியானம் – ஆகஸ்ட் 23, 2022

லூக்கா 17: 11 – 21

மற்ற ஒன்பது பேர் எங்கே? 

                    நம்முடைய ஆண்டவர் கணக்கு வைத்திருக்கிறார். சுகமானவர்கள் பத்து பேர். நன்றி செலுத்த திரும்பி வந்ததோ ஒருவன் மட்டும்தான். நீ நன்றி செலுத்துவதில் தவறியிருக்கிறாயா? அல்லது நன்றி செலுத்தவேண்டும் என்ற எண்ணம் இருந்தும் அதைக் கடத்திக் கொண்டே போகிறாயா? அல்லது பொருத்தனையை நிறைவேற்றுவதைக் கடத்திக்கொண்டே போகிறாயா? நீ பெறும் நன்மைகளெல்லாம் உன் ஆண்டவரிடமிருந்து வருகின்றன என்பதை உணருகிறாயா? அல்லது, அவைகளெல்லாம் மருத்துவரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும், உன் பணத்தின் மூலமாகவும் வருகின்றன என்று நினைக்கிறாயா? நன்றி செலுத்துவதின் மூலம் கர்த்தருக்கு உன் உள்ளத்தைக் காண்பிக்கிறாய். நன்றி செலுத்துவதின் மூலம் நம் ஆண்டவரோடு நமக்கு இருக்கும் உறவு வலுவாகிறது. துதிப் பாடல்கள் பாடி ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். குடும்பமாய் பாடுவோம்.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் கொடுத்து வந்துள்ள நன்மைகள் ஏராளம். ஆனால் அநேக தருணங்களில் நான் உமக்கு நன்றி சொல்லவும், உம்மைத் துதிக்கவும் தவறியுள்ளேன். என்னை மன்னியும். ஆமென்.