காலைத் தியானம் – ஆகஸ்ட் 25, 2022

லூக்கா 18: 1 – 8

சீக்கிரத்தில் அவர்களுக்கு நியாயஞ்செய்வார் 

                    இந்த உவமையின் மூலம் நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் பல. ஒன்று நாம் சோர்ந்துபோகாமல் ஜெபம் பண்ணவேண்டும். நாம் நம்முடைய ஆண்டவரோடு அடிக்கடி பேசுவதுதான் ஜெபம். ஜெபம், நம் இருதயத்தின் விருப்பங்களைக் கர்த்தரின் விருப்பத்திற்கு உட்பட்டதாக இருக்க உதவி செய்கிறது. இரண்டாவதாக, கர்த்தர் தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களுக்கு நியாயம் செய்வார். நீ தேடுவது நியாயம் என்றால், அது நிச்சயமாக உனக்குக் கொடுக்கப்படும். மூன்றாவதாக கர்த்தருக்கு உன் தேவை இன்னதென்றும், அது எப்பொழுது கொடுக்கப்பட்டால் உனக்கு நன்மையாக இருக்கும் என்பதும் தெரியும். அதுவரை பொறுமையாய் அவரை நோக்கி பார். பன்னிரண்டு வருடங்களாய் பெரும்பாடு பட்ட ஒரு பெண்ணுக்கு அவர் நன்மை செய்யவில்லையா?

ஜெபம்:

ஆண்டவரே, நீர் என் கூப்பிடுதலைக் கேட்டு எனக்கு நியாயம் செய்யும் வரை பொறுமையாகக் காத்திருக்க எனக்கு உதவி செய்யும்.  ஆமென்.