காலைத் தியானம் – ஆகஸ்ட் 27, 2022

லூக்கா 18: 18 – 19

நல்ல போதகரே . . .  

                     நல்ல போதகர் என்பது நாம் “இவர் ஒரு நல்ல ஆசிரியர்” என்று சொல்வதற்கு ஒப்பானது இல்லை. நல்ல போதகர் என்பது குற்றமற்ற, அல்லது பாவமே செய்யாத போதகர் என்பதைக் குறிக்கிறது. தேவன் ஒருவர்தானே குற்றமற்றவர்; நீ ஏன் என்னைக் குற்றமற்றவர் என்று அழைக்கிறாய் என்று இயேசு கேட்டதற்கு அந்தத் தலைவன், ஆண்டவரே, நீர் தேவனுடைய குமாரன்; நீர் குற்றமற்றவர்; பாவம் செய்யாதவர் என்று சொல்லியிருக்க வேண்டும். அவன் என்ன சொன்னான் என்று வேதாகமத்தில் சொல்லப்படவில்லை. ஆதாம் முதல், இவ்வுலகில் வாழ்ந்த, வாழ்கின்ற மற்றும் வாழப்போகும் மனிதர்களுள், மனித உருவேற்று 33 வருடங்கள் பூமியில் வாழ்ந்த இயேசுவைத் தவிர வேறே ஒருவரும் குற்றமற்றவர் அல்லது பாவம் செய்யாதவர் இல்லை. அவர் ஒருவரே வணங்கப்படத்தக்கவர்.

ஜெபம்:

ஆண்டவரே, என்னுடைய உள்ளத்தில் உமக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை வேறே யாருக்கும் அல்லது எந்த பொருளுக்கும் கொடுத்து விடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.