காலைத் தியானம் – ஆகஸ்ட் 28, 2022

லூக்கா 18: 20 – 22

பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும் 

                     இங்கு இயேசு ஒரு பொருளாதார முதலீட்டுத் திட்டத்தைக் குறித்து போதிக்கவில்லை. வேறு விதமாக சொல்லவேண்டுமானால், பரலோகத்தில் சொத்து சேர்க்க வேண்டும் என்பதற்காக நாம் ஏழைகளுக்கு உதவி செய்வது பிரயோஜனமற்றது. நாம் நம்மை நேசிப்பது போல ஏழைகளையும் நேசிக்க வேண்டும். அவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அந்த அன்பு, அவர்களுக்கு உதவி செய்யாமல் நம்மை இருக்க விடாது. அப்படிப்பட்ட அன்பின் விளைவு தான், பரலோகத்தின் பொக்கிஷம். நாம் பூமியில் வாழும் சொற்ப காலத்தில், நம் எண்ணம் பரலோகத்தை விட்டு விலகக் கூடாது என்பது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றொரு பாடம். உன் பொருளையும் உன் தாலந்தையும் மற்றவர்களுக்குக் கொடு. தனிமையில் அல்லது துக்கத்தில் இருக்கும் உன் சகோதரர்களையும் சகோதரிகளையும் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதலாகவும் உதவியாகவும் இரு. நீ உன்னைப் போல பிறனையும் நேசிக்கிறாய் என்பதை உன் செயலில் காட்டு.

ஜெபம்:

ஆண்டவரே, நான் பிறரிடத்தில் அன்புகூரவும், சுயநலமற்ற வாழ்க்கை வாழவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.