காலைத் தியானம் – ஆகஸ்ட் 30, 2022

லூக்கா 18: 28 – 43

அவனோ . . .  மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான் 

                    இன்றைய வேதபகுதியில் இரண்டு தியானக் குறிப்புகளைக் கவனிப்போம். முதலாவதாக, குருடன் இயேசுவை மேசியா என்று அறிந்திருந்தான். கண்பார்வை உள்ள சபை மூப்பர்கள் அறியாததை கண் பார்வையற்ற குருடன் அறிந்திருந்தான். உனக்கு இயேசுவை நன்றாகத் தெரியுமா? நீ எந்த அளவுக்கு அவரை அறிந்திருக்கிறாய்? இரண்டாவதாக, சீஷர்களும் மற்ற மனிதர்களும் அதட்டியும் குருடன் சும்மாயிருக்கவில்லை. அவன் இன்னும் அதிகமாய்க் கூப்பிட்டான். இயேசு அந்த சத்தத்தைக் கேட்டு நின்று அவனுடன் பேசி அவனைக் குணப்படுத்தினார். ஏமாற்றங்களோ அல்லது தாமதமோ உன்னை அதட்டினால் பயந்து விடாதே. இயேசுவை இன்னும் அதிகமாய்க் கூப்பிடு.

ஜெபம்:

ஆண்டவரே, தடங்கல்களும் தாமதமும் ஏற்படும்போது சோர்ந்து போகாமல் உம்மிடம் என் மன்றாட்டுகளையும் விண்ணப்பங்களையும் ஏறெடுக்க என்னைப் பக்குவப்படுத்தும். ஆமென்.