காலைத் தியானம் – செப்டம்பர் 01, 2022

லூக்கா 19: 11 – 27

நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் 

                    இயேசுவின் ராஜ்யம் வித்தியாசமானது. அங்குள்ள விதிமுறைகள் நம் சிந்தனைகளின் படி அமைந்தவைகள் அல்ல. அதிகாலையில் வேலையில் சேர்ந்தவனுக்கும், பதினோராம் மணி வேளையில் வேலையில் சேர்ந்தவனுக்கும் ஒரே சம்பளம்தானாம்! (மத்தேயு 20:1-14). உள்ளவனுக்கு அதிகமாய்க் கொடுக்கப்படும்; இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படுமாம்! உள்ளவனுக்கு ஏன் அதிகமாகக் கொடுக்கப்படுகிறது? ஏனென்றால் அவன் கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாய் இருக்கிறான். ஆண்டவர் உன்னிடத்திலும் கணக்குக் கேட்பார். நான் அதிகமாய் படித்திருந்தும் அவனுக்குக் கிடைத்திருக்கும் வேலையைப் போல எனக்கு இல்லையே என்று நினைக்கிறாயோ? உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலையை, தாலந்துகளை மற்றும் பணத்தை எப்படி உபயோகிக்கிறாய்? (வெளி 22:12).

ஜெபம்:

ஆண்டவரே, உம்மை நான் முகமுகமாய் சந்திக்கும் அந்த நாளில், ’நல்லது உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே’ என்று நீர் கூறும்படி என் வாழ்க்கை பூலோகத்தில் அமைய கிருபை தாரும். ஆமென்.