காலைத் தியானம் – செப்டம்பர் 02, 2022

லூக்கா 19: 28 – 38

அது ஆண்டவருக்கு வேண்டும் 

                    கழுதைக்குட்டி ஆண்டவருக்கு வேண்டும் என்று சொன்னவுடன் மறுவார்த்தை பேசாமல் கொடுத்துவிட்டார்கள். உன்னிடத்தில் உன் ஆண்டவர் கேட்பது என்ன? அதற்கு உன் பதில் என்ன? ஆண்டவர் உன்னிடத்தில் கேட்பது உன் நேரமா அல்லது உன் திறமையா அல்லது உன்னிடத்திலுள்ள பொருளா? அவர் எதைக் கேட்டாலும் மறுவார்த்தைப் பேசாமல் கொடுத்துவிடு. ஆண்டவர் நம் எல்லாரிடத்திலும் கேட்பது ஒன்று உண்டு. அதுதான் நம் இருதயம். உன் உள்ளத்தை முழுமையாக ஆண்டவரிடம் கொடுக்காமல் புது சிருஷ்டியாக முடியாது (மறுபடியும் பிறக்க முடியாது.) You can not be born again.  பரலோகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுக்காமல், பரலோகக் குடிமகனா(ளா)க பூமியில் வாழ முடியாது. (உபா 6:5)                                               

ஜெபம்:

ஆண்டவரே, என் உள்ளத்தை முழுமையாக உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். அப்பொழுது என் நேரம், திறமை, பணம், பொருள் யாவும் உம்முடைய கட்டுப்பாட்டின்படி இயங்கும். ஏற்றுக் கொள்ளும். ஆமென்.