லூக்கா 20: 1 – 8
இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லேன்
இயேசுவின் தெய்வீகத் தன்மையையும், தெய்வீக செயல்களையும் அருகிலிருந்து பார்த்தவர்களில் அநேகர் அவரைத் தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கவில்லை. சாத்தான் அவர்கள் கண்களை மூடி, அவர்கள் மனதில் சந்தேகங்களை ஏற்படுத்தி விட்டான். நீர் இதைச் செய்தால்தான் நான் உம்மை தேவனுடைய குமாரன் என்று ஏற்றுக் கொள்வேன் என்பது போன்ற நிபந்தனைகளை அவர் விரும்புகிறதில்லை. அற்புதங்களை பார்க்கிற அநேகர் அவரை விசுவாசிப்பதில்லை. அற்புதங்களைக் கண்ட பரிசேயர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? இவன் பிசாசுகளின் தலைவன்; ஆகவே தான் பிசாசுகளை துரத்துகிறான் என்றார்கள். (மத்தேயு 9:34). உன் வாழ்க்கையில் நீ கண்டு உணர்ந்த, அனுபவித்த அற்புதங்கள் எத்தனை? அவைகளைக் குறித்து நீ தேவனைத் துதிக்கிறாயா அல்லது இவைகள் இயற்கையாக நடந்தன என்றோ அல்லது டாக்டர்களின் திறமையால் நடந்தன என்றோ கூறுகிறாயா?
ஜெபம்:
ஆண்டவரே, உம்மிடத்திலிருந்து நான் பெற்ற நன்மைகள் ஏராளம். சகல கனமும், மகிமையும், புகழும், துதியும் உமக்கே செலுத்துகிறேன். ஆமென்.