காலைத் தியானம் – செப்டம்பர் 05, 2022

லூக்கா 20: 9 – 16

பருவ காலத்திலே ஒரு ஊழியக்காரனை அனுப்பினான் 

                    உன்னிடத்திலும் ஒரு தோட்டம் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. குடும்பம் என்பதே அந்த குத்தகைத் தோட்டம். அந்தத் தோட்டம் உன் ஆண்டவருக்கே சொந்தமானது. நீ வெறும் குத்தகைக்காரன் தான். குடும்பம் என்ற அந்தத் தோட்டத்தில் நீ எத்தனை நன்மைகளை அனுபவித்து வருகிறாய்! ஆனால் அதில் உன் ஆண்டவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வருகிறாயா? உன் பிள்ளைகளை உன் ஆண்டவருக்குப் பிரியமான வழிகளில் வளர்ப்பது அவர் விரும்பும் கனி. அதுவே உன் ஆண்டவர் தன் தோட்டத்திலிருந்து எதிர்பார்க்கும் பாகம் (எரேமியா 6: 4)

ஜெபம்:

ஆண்டவரே, நீர் எனக்கு குத்தகைக்குக் கொடுத்துள்ள அருமையான குடும்பத்திற்காக நன்றி. நீர் எனக்குக் கொடுத்துள்ள பிள்ளைகளை நீர் விரும்பும் ஒழுங்குகளிலும் போதனைகளிலும் வளர்க்க வேண்டிய ஞானத்தை தாரும். ஆமென்.