காலைத் தியானம் – செப்டம்பர் 06, 2022

லூக்கா 20: 17 – 20

தங்களைக் குறித்து இந்த உவமையைச் சொன்னார் என்று அறிந்து

                    பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைப் பற்றி கூறப்பட்ட உவமையின் அர்த்தத்தை அறிந்து கொண்டார்கள். ஆனால் மனந்திரும்புவதற்குப் பதிலாக இயேசுவைப் பிடிக்கவும், அவர் பேச்சில் குற்றம் கண்டுபிடிக்கவும் வகை தேடினார்கள். நம் பாவங்கள் உணர்த்தப்படும் தருணங்கள் ஏராளம் உண்டு. நாம் எடுக்கும் முடிவு என்ன? பாவங்களை உணர்ந்து அறிக்கையிட்டு மீட்கப்பட்டிருக்கிறோமா அல்லது சாக்குபோக்கு சொல்லி நம் பாவ நிலையை நியாயப்படுத்துகிறோமா? இந்த ஆயத்த நாட்களை வீணாக்க வேண்டாம். உன் நிலையை நியாயப்படுத்திக் கொண்டேயிருப்பது உன்னை நித்திய அக்கினிக்குக் கொண்டுபோய்விடும். தேவனிடத்தில் உன் பாவங்களை அறிக்கையிட்டால் அவர் அவைகளை உனக்கு மன்னித்து உன்னை இரட்சிப்பார். (2 கொரிந்தியர் 6:2)

ஜெபம்:

ஆண்டவரே, நான் பாவி. என்னைக் கழுவி, சுத்திகரித்து, சுத்தமான இருதயத்தை எனக்குத் தாரும். ஆமென்.