காலைத் தியானம் – செப்டம்பர் 07, 2022

லூக்கா 20: 21 – 26

ராயனுடையதை ராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்  

                    இன்றைய சூழ்நிலையில் இரண்டிலும் நாம் தவறி விடுகிறோமோ? வரி ராயனுடையது. வருமான வரி விஷயத்தில், நாம் உண்மையுள்ளவர்களாய் இருக்கிறோமா? நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம். நம்மிடத்தில் குறைவு உண்டென்றால் இன்றே அதைக் குறித்து, ஆண்டவர் முன்னிலையில் ஒரு தீர்மானம் எடுப்போமாக. இரண்டாவதாக, தேவனுடையது எது என்பதைக் கவனிப்போம். ஆலயத்துக்குச் சென்று காணிக்கையைச் செலுத்தி விட்டால் கடமை முடிந்து விட்டதாக எண்ணவேண்டாம். நீ தான் தேவனுடையவன்(ள்). உன் உடல், உள்ளம், பேச்சு, சிந்தனைகள் அனைத்தும் தேவனுடையவைகள். இவைகள் அனைத்தையும் தேவனுக்கே அர்ப்பணித்து விட்டாயா? (1 கொரிந்தியர் 6: 19-20)

ஜெபம்:

ஆண்டவரே, என் உடல், உள்ளம் அனைத்தும் உனக்கே சொந்தம். அவைகளைக் கறைப் படுத்திவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.