காலைத் தியானம் – செப்டம்பர் 08, 2022

லூக்கா 20: 27 – 38

மறுமையையும் … அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறீர்களோ?  

                   

சதுசேயர்களின் சிலருக்கு மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை உண்டு என்பதில் நம்பிக்கை இல்லை. இயேசு சுவாமி கொடுத்த விளக்கத்தில் மற்றொரு உண்மை வெளிப்படுகிறது. மரணத்திற்குப் பின் மகிமையின் வாழ்க்கை ஒன்று உண்டு. ஆனால் அவ்வாழ்க்கையை எல்லாரும் அடைவதில்லையாம். அதை அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களுக்கு மாத்திரமே அந்த மகிமையான வாழ்க்கை கிடைக்கும். மற்றவர்களுக்கு அது கிடைக்காது. நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது அல்லவா? அந்த மகிமையின் வாழ்க்கையை நாம் அடையவேண்டும் என்றால், நம் பூலோக வாழ்க்கையில் நம்மை ஆயத்தப் படுத்திக்கொள்ளவேண்டும்.

(1 கொரிந்தியர் 15: 19, 52, 53)

ஜெபம்:

ஆண்டவரே, மறுமையின் மகிமையான வாழ்க்கையை நான் அடையவும், உம்மை முகமுகமாய் தரிசிக்கவும் எனக்குக் கிருபை தாரும். ஆமென்.