காலைத் தியானம் – செப்டம்பர் 09, 2022

லூக்கா 20: 39 – 47

பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகர்

வேதபாரகர் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப் போல் இருந்தார்கள். வெளியே அழகான, சுத்தமான தோற்றம். உள்ளே உயிரற்ற உடல்.  நீண்ட அங்கிகளை அணிந்து கொண்டு நீண்ட ஜெபங்களைப் பண்ணினார்கள். ஆனால் அவர்கள் உள்ளத்தில் தூய்மை இல்லை. அவர்கள் விரும்பியதெல்லாம் சந்தைகளில் வந்தனங்கள், ஆலயங்களில் முதன்மையான ஆசனம், விருந்துகளில் முதன்மையான இடம் ஆகியவைகள்தான். தேவனுடைய மெச்சுதலையும் பாராட்டுகளையும் அவர்கள் நாடவில்லை. இன்று கூட நம்மில் அநேகர் அப்படித்தானே இருக்கிறோம்! மக்கள் நம்மைப் பரிசுத்தவான்கள் என்று நினைக்கிறார்கள். ஆலயத்துக்கு ஒழுங்காக செல்லுகிறோம். வெளிப்புற சடங்காச்சாரங்களில் வைராக்கியம் உள்ளவர்களாகக் காணப்படுகிறோம். ஆனால் நம் உள்ளம் தேவனுக்கு மட்டுமே தெரியும். நாம் ஆக்கினைக்கு நீங்கலாக இருப்போமாக!  (மத்தேயு 6: 5)

ஜெபம்:

ஆண்டவரே, மனிதரின் பாராட்டுதலைப் பெறும்படி வேஷம் போட்டு, என் வாழ்வை வீணடித்து விடாமல், உம் பாராட்டுதலை மாத்திரம் பெறும்படி என்னைத் தூய்மையாய் வைத்துக் கொள்ள எனக்குக் கிருபை தாரும். ஆமென்.