காலைத் தியானம் – செப்டம்பர் 10, 2022

லூக்கா 21: 1 – 4

காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்

நாம் கொடுக்கும் காணிக்கைகளையும் ஆண்டவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். நாம் கொடுக்கும் காணிக்கைகளை மனிதர்கள் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நீ கொடுப்பதைப் பார்த்து ஆண்டவர் உன்னை மெச்சுகிறாரா? நாம் பணத்தையும் பொருட்களையும் காணிக்கையாகக் கொடுப்பதைப் பற்றி மல்கியா 3: 7-10 வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் காணிக்கை என்பது பணத்தை கொடுப்பது மாத்திரம் அல்ல. உன் நேரத்தை ஆண்டவரின் ஊழியத்திற்காக காணிக்கையாகக் கொடுக்கலாம். உன் திறமைகளையும் காணிக்கையாகப் படைக்கலாம். நீ கொடுக்கும் காணிக்கைகள் யாவை? அவை எப்படிப்பட்டவை? அவைகள் நன்றியுள்ள இருதயத்தின் ஆழத்திலிருந்து வருகின்றனவா? (2 கொரிந்தியர் 8: 3)

ஜெபம்:

ஆண்டவரே, நீர் என்னை ஆசீர்வதிக்கவேண்டும் என்பதற்காக நான் காணிக்கைகளைக் கொடுக்கவில்லை. நீர் கொடுத்துள்ள அநேக ஆசீர்வாதங்களுக்காக நன்றியுள்ள இருதயத்தோடு என் காணிக்கைகளைப் படைக்கிறேன். அங்கீகரியும். ஆமென்.