காலைத் தியானம் – செப்டம்பர் 11, 2022

லூக்கா 21: 5 – 11

ஒரு கல் மற்றொரு கல்லியின் மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும்

இயேசுவோடு கூட இருந்த சீஷர்களும் மற்றவர்களும் தேவாலய கட்டிடத்தின் அழகையும் அலங்கரிப்பையும் பார்த்து வியந்து பாராட்டினார்கள். இயேசு அந்த கட்டிடமும் அதன் அழகும் ஆடம்பரமும் நிலையற்றது என்பதை நினைவு படுத்துகிறார். கி.மு. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், எஸ்றாவால் கட்டப்பட்ட இந்த ஆலயம், இயேசுகிறிஸ்து கூறியது போல கிபி 70 ஆம் ஆண்டில், ரோமர்களால் அழிக்கப்பட்டது. இன்றும் ஆலய கட்டிடங்களை அலங்கரிப்பதிலும் ஆடம்பரப்படுத்துவதிலும் எவ்வளவு பணத்தையும் நேரத்தையும் செலவழிக்கிறோம்! நம் உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தமாகப் பாதுகாக்க என்ன செய்கிறோம்? நம் ஆண்டவர் விரும்புவது நம் சரீரமாகிய ஆலயத்தை தான்.

(1 கொரிந்தியர் 6: 19)

ஜெபம்:

ஆண்டவரே, நிரந்தரமற்ற காரியங்களில் நேரத்தை வீணடிக்காமல், நித்திய வாழ்க்கைக்கு ஏற்றதாக என் சரீரத்தையும் ஆத்துமாவையும் பரிசுத்தமாகக் காத்துக் கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்.