காலைத் தியானம் – செப்டம்பர் 12, 2022

லூக்கா 21: 12 – 24

ஆனாலும் உங்கள் தலை மயிரில் ஒன்றாகிலும் அழியாது

இயேசுவுக்கு சீஷர்களாயிருக்கிறவர்களுக்குத் துன்பங்கள் பல உண்டு. ஆனால் இயேசு தம் சீஷர்களோடு இருக்கிறதனால், அவர்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படாது. துன்பம் உண்டு; ஆனால் அழிவு இல்லை. துன்பம் உண்டு; ஆனால் அந்த துன்பம் இன்பமாக மாறிவிடும். இயேசுவின் பிரசன்னம் துன்பத்தை இன்பமாக மாற்றிவிடும். இயேசுவின் பிரசன்னத்தில் இருப்பதற்கு சில வழிமுறைகள் உண்டு. அவைகளில் தனிமையும், அமைதியும் மிகவும் முக்கியமானவை. தனிமையாய் இருந்து தேவனைத் துதித்துப் பாடவேண்டும். துதிப் பாடல்களை மனப்பாடம் செய்து கொள்வோம். அமைதியாய் இருந்து தேவப்பிரசன்னத்தை உணர்ந்து கொள்வோம். Be still and know that I am God. (சங்கீதம் 46: 10)          

ஜெபம்:

ஆண்டவரே, அமைதியாயிருந்து அனுதினமும் உம் பிரசன்னத்தில் மகிழ்ந்திருக்க எனக்குக் கிருபை தாரும். ஆமென்.