காலைத் தியானம் – செப்டம்பர் 13, 2022

லூக்கா 21: 25 – 33

என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை            

வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தருடைய வார்த்தை என்பதை விசுவாசிக்கிறாயா? வேதாகமத்தின் சில பகுதிகளில் சொல்லப்பட்டுள்ள சரித்திரத்தின் மூலமாக நாம் அநேக பாடங்களைப் படிக்கிறோம். இயேசுகிறிஸ்துவைப் பற்றியும் அவர் மூலமாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள இரட்சிப்பைப் பற்றியும் வேதாகமம் முழுவதும் நாம் பார்க்கிறோம். சில பகுதிகளில் தீர்க்கதரிசனங்களைக் குறித்து வாசிக்கிறோம். தீர்க்கதரிசனங்களில் பல நிறைவேறி விட்டன. சில நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் சீக்கிரத்தில் நிறைவேறப் போகின்றன. அதே சமயம் வேதத்தைப் புரட்டுகிற கள்ளத் தீர்க்கதரிசிகளும் நம் மத்தியில் இருக்கிறார்கள். தொலைக்காட்சியில் வரும் எல்லா பிரசங்கிமாரையும் நம்ப முடிவதில்லை. வேதாகமத்துக்குப் புறம்பான, மற்றும் முரணான போதனைகளைப் புறக்கணியுங்கள். கர்த்தரிடம் ஞானத்துக்காக மன்றாடுங்கள்.          

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய வார்த்தைகளை மாத்திரம் பிடித்துக் கொள்ளும் ஞானத்தை எனக்குத் தாரும். ஆமென்.