காலைத் தியானம் – செப்டம்பர் 15, 2022

லூக்கா 22: 1 – 13

கம்பளம் முதலானவைகள் விரித்திருக்கிற அறையை உங்களுக்குக் காண்பிப்பான்        

இரண்டு பேரைப் பற்றி இன்று வாசிக்கிறோம். ஒருவனுக்குள் சாத்தான் புகுந்தான் என்று பார்க்கிறோம். அவன் இயேசுவுக்கு விரோதமான செயலில் ஈடுபடுகிறான். அடுத்தவன் இயேசுவுக்கு உதவி செய்கிறான். ஒருவன் சாத்தானுக்கு தன் இருதயத்தைத் திறக்கிறான். மற்றவன் இயேசுவுக்குத் தன் இருதயத்தை திறக்கிறான். நீ இடம் கொடுக்காவிட்டால் சாத்தானும் உன் உள்ளத்திற்குள் வர முடியாது; இயேசுவும் உன் உள்ளத்திற்குள் வர முடியாது. உன் உள்ளத்தின் சாவி உன் கையில் தான் இருக்கிறது. யாருக்கு கதவைத் திறக்கப் போகிறாய்? (வெளி 3:20) 

ஜெபம்:

ஆண்டவரே, என் உள்ளத்தில் எப்போதும் உமக்கு மாத்திரமே இடமுண்டு. எப்போதும் என்னுடனே தங்கியிரும். ஆமென்.