லூக்கா 22: 14 – 23
அப்பத்தை எடுத்து . . . . அதைப் பிட்டு
அப்பம் இரண்டாகப் பிட்கப்படுவது போல என் சரீரமும் பிட்கப்படும் என்று இயேசு சுட்டிக் காட்டுகிறார். அவருடைய சரீரம் பிட்கப்பட்டதால் தான் நம் அனைவருக்கும் இரட்சிப்பு வந்தது. சரீர சொகுசை விரும்புகிறவன் மற்றவர்களை இரட்சிப்புக்கு நேராக வழிநடத்தும் பணியில் ஈடுபட முடியாது. நீ உன் இரட்சகராகிய இயேசுவை நேசித்தால் அவர் நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளையின்படி எல்லா மனிதருக்கும் சுவிசேஷத்தை அறிவித்து அவர்களை இரட்சிப்புக்கு நேராக வழி நடத்த வேண்டும். தன் சரீர சொகுசைப் பெரிதாக எண்ணுகிற ஒருவனாலும் இதை செய்ய முடியாது. இயேசுவுக்காக, மற்ற மனிதரின் இரட்சிப்புக்காக பாடுகள் அனுபவிக்க நீ தயாரா? (2 தீமோத்தேயு 2:3)
ஜெபம்:
ஆண்டவரே, உம்முடைய கருவியாக என்னை உம்மிடம் ஒப்படைக்கிறேன். என் சரீர சொகுசை இழந்து தீங்கு அனுபவிக்க நேரிட்டால், அதற்கு வேண்டிய பெலனைத் தந்து என்னைத் தாங்கியருளும். ஆமென்.