காலைத் தியானம் – செப்டம்பர் 17, 2022

லூக்கா 22: 24 – 34

நான் உங்கள் நடுவில் பணிவிடைக்காரனைப் போல் இருக்கிறேன்     

இயேசு இவ்வுலகில் மிகவும் எளிமையான முறையில் வாழ்ந்து காட்டினார். அவர் ராஜாதி ராஜனாக இருந்தும் பணிவிடைக்காரனைப் போல வாழ்ந்தார். அப்படியிருந்தும், அவருடன் நெருங்கிப் பழகிய சீஷர்களே அந்த முன்மாதிரியைப் பின்பற்றவில்லை. அவர்கள் தங்களுக்குள் யார் பெரியவன் என்று வாக்குவாதம் பண்ணிக் கொண்டார்கள். இவ்வுலக வழக்கத்தின் படி வேலை வாங்குகிறவன் பெரியவன். பணிவிடை செய்கிறவன் தாழ்ந்தவன். பரலோக ஒழுங்கின்படி பணிவிடை செய்கிறவன் தான் பெரியவன். சந்தர்ப்பங்களை தேடி சென்று முக மலர்ச்சியுடன் பணிவிடை செய். (மத்தேயு 25: 35, 36) 

ஜெபம்:

ஆண்டவரே, பணிவிடை செய்யும் சந்தர்ப்பங்கள் எனக்கு அநேகம் உண்டு. முகமலர்ச்சியுடன் பணிவிடை செய்ய எனக்கு உதவி செய்யும். ஆமென்.