காலைத் தியானம் – செப்டம்பர் 18, 2022

லூக்கா 22: 35 – 46

நீங்கள் நித்திரை பண்ணுகிறதென்ன?    

இரண்டு நாட்களுக்கு முன், நாம் சரீர சொகுசைப் பார்க்காமல் தீங்கு அனுபவிக்க தயாராக இருக்க வேண்டும் என்று பார்த்தோம். ஆனால் இன்று வாசித்த பகுதியில் நடந்தது என்ன? இயேசு தனிமையில் போராடிக் கொண்டிருந்தார். துணைக்குச் சென்ற சீஷர்களோ தூங்கிக் கொண்டிருந்தார்கள். கடுமையான போர் நடந்து கொண்டிருக்கும்போது போரில் பங்கெடுத்துக்கொள்ளாமல் ஒரு மூலையில் போய் படுத்துத் தூங்குவது தான் இயேசு கிறிஸ்துவின் போர்ச் சேவகனுடைய வேலையா? இன்று சிற்றின்பத்திற்கும், அநியாயத்திற்கும், அநீதிக்கும் எதிராகப் போர் நடந்து கொண்டிருக்கிறது. நீ தூங்கிக் கொண்டிருக்கிறாயோ? உனக்கும் போரில் ஒரு பங்கு உண்டு. (1 தீமோ 6: 12)    

ஜெபம்:

ஆண்டவரே, என் சரீரம் பலவீனமானது. நீர் என்னுடனே இருந்து, நல்ல போர்ச் சேவகனாக வாழ எனக்குப் பெலன் தாரும். ஆமென்.