காலைத் தியானம் – செப்டம்பர் 19, 2022

லூக்கா 22: 47 – 55

பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்     

இயேசுவின் பக்கத்தில் நடந்து சென்றால் தன்னையும் பிடித்து சிலுவையில் அறைந்து கொன்றுவிடுவார்களோ என்ற பயத்தில், பேதுரு தூரத்தில் பின்சென்றான். பாதுகாப்பைக் கருதி அவன் தூரத்தில் பின்சென்றான். தூரத்தில் பின்செல்வதால் ஒருவேளை சரீரத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் நித்திய ஜீவனை இழந்துவிடக்கூடிய நிலை ஏற்படுகிறது. நாம் பாவச் செயல்களில் ஈடுபடும் போதும், பாவ எண்ணங்கள் நம்மைச் சூழ்ந்து கொள்ளும் போதும் இயேசுவின் அருகில் செல்ல முடிவதில்லை. அவரை தூரத்தில் பின்தொடர முயற்சிக்கிறோம். நித்திய வாழ்வை பெற வேண்டுமானால் தூரத்தில் பின் செல்வதில் பிரயோஜனம் இல்லை.    

ஜெபம்:

ஆண்டவரே, என்னை உம்மிடமிருந்து பிரிக்கும் பாவச் செயல்களிலிருந்தும் பாவ எண்ணங்களிலிருந்தும் பூரண விடுதலையைத் தாரும். ஆமென்.