லூக்கா 22: 56 – 62
அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப் பார்த்தார்
பேதுரு விழுந்தவுடனே இயேசு அவனைத் திரும்பிப் பார்த்தார். ஆண்டவர் திரும்பிப் பார்த்ததும் தன்னைப் பார்த்தது ஆண்டவர்தான் என்பதை கண்டு கொண்டான் பேதுரு. ஆண்டவரின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டான் பேதுரு. அவருடைய பார்வை பேதுருவை உருக்கியது. ஆண்டவர் நம்மையும் திரும்பிப் பார்க்கும்போது நம்மைத் திரும்பிப் பார்ப்பது ஆண்டவர்தான் என்பதை கண்டுகொள்ளும் அளவுக்கு அவருடைய முகம் நமக்கு பழக்கமானதா? ஆண்டவரோடு அனுதினமும் பழகி வருகிறோமா? ஆண்டவர் நம்மோடு பேசும்போது பேசுவது ஆண்டவர்தான் என்பதை அறிந்துகொள்ள முடிகிறதா? (1சாமுவேல் 3: 4, 5, 10)
ஜெபம்:
ஆண்டவரே, நீர் என்னுடன் பேச முற்படும்பொழுது நான் எங்கெங்கோ ஓடி விடுகிறேன். என்னைப் பிடித்துள்ள பிடியை விட்டு விடாதேயும். ஆமென்.