காலைத் தியானம் – செப்டம்பர் 22, 2022

லூக்கா 23: 1 – 10

அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசை கொண்டிருந்தான்    

ஏரோது, இயேசு செய்த அற்புதங்களைக் காணவேண்டுமென்று ஆசைப்பட்டான். இயேசுவை ஒரு மந்திரவாதியாக மதித்து அவருடைய மந்திர வித்தைகளைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டான்.  அந்த ஆசை மிகவும் கீழ்த்தரமான ஆசை. அந்த ஆசையை இயேசு நிறைவேற்றி வைக்கவில்லை. ஏரோது கேட்ட கேள்விகளுக்குக் கூட இயேசு பதிலளிக்கவில்லை. உலக நன்மைகளுக்காக மாத்திரம் நாம் இயேசுவைத் தேடுகிறோமோ? பூலோக நன்மைகளையும், பரலோக நன்மைகளையும் கொடுக்கக் கூடியவரிடத்தில், பூலோக நன்மைகளை மாத்திரம் கேட்பது எவ்வளவு மடத்தனம்! (லூக்கா 11: 13) 

ஜெபம்:

ஆண்டவரே, பூலோக நன்மைகள் நிரந்தரமற்றவை என்பதை நான் அறிவேன். பரலோக நன்மைகளை நான் பெறத்தக்கதாக பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பியருளும். ஆமென்.