காலைத் தியானம் – செப்டம்பர் 23, 2022

லூக்கா 23: 11 – 25

இவனை அகற்றும்; பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும்

நூற்றுக்கு நூறு பரிசுத்தத்தையும், நூற்றுக்கு நூறு அன்பையும், நூற்றுக்கு நூறு நியாயத்தையும் விரும்புகிறவர்கள் நம்மில் எத்தனை பேர் உண்டு? நாம் அப்படி விரும்புகிறதில்லை என்பதுதான் உண்மையென்றால், நாமும் இவனை அகற்றும் என்று கூச்சல் போடும் கூட்டத்தில் தானே இருக்கிறோம்! கொஞ்சம் கிறிஸ்து; கொஞ்சம் பரபாஸ் என்பது கூடாத காரியம். இது நாம் தெரிந்தெடுக்க வேண்டிய விஷயம்.  நம்முடைய விருப்பம், முற்றிலும் கிறிஸ்து அல்லது முற்றிலும் பரபாஸ் என்றுதான் இருக்க முடியும். The choice is before us. What do we choose?  பரபாசை முற்றிலும் அகற்ற விருப்பமில்லையோ? (மத்தேயு 6: 24)

ஜெபம்:

ஆண்டவரே, பரபாசை என்னிடத்திலிருந்து முற்றிலும் அகற்றிவிடும். நீரே எனக்கு வேண்டும். ஆமென்.