காலைத் தியானம் – செப்டம்பர் 25, 2022

லூக்கா 23: 35 – 45

ஆண்டவரே . . .  அடியேனை நினைத்தருளும்

வழியில் நடந்து போகிறவர்கள் பரியாசம் பண்ணினார்கள். அதிகாரிகள் பரியாசம் பண்ணினார்கள். போர்ச்சேவகர்களும் பரியாசம் பண்ணினார்கள். ஆனால் அவரைப் பரியாசம் பண்ணாமல் இருந்தது ஒரு கள்ளன். கல்வாரி கூட்டத்தில் யாருக்கும் புலப்படாமல் இருந்த ஒரு உண்மை இந்த கள்ளனுக்கு புலப்பட்டது. அதுவும் ஆண்டவரின் அருள் என்று தான் நான் நம்புகிறேன். அந்த மாபெரும் கூட்டத்தில் ஒருவனுக்குத் தான் இரட்சிப்பு கிடைத்தது.  அழைக்கப்பட்டவர்கள் அநேகர்; தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர். (மத்தேயு 20: 16)

ஜெபம்:

ஆண்டவரே, தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் நானும் ஒருவனாக இருக்க அருள் புரியும் சுவாமி. ஆமென்.