காலைத் தியானம் – செப்டம்பர் 26, 2022

லூக்கா 23: 46 – 56

நூற்றுக்கு அதிபதி . . . தேவனை மகிமைப்படுத்தினான்

கல்வாரியில் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுகின்றன. கள்ளனுடைய விசுவாசக்கண் திறக்கப்பட்டது ஒரு எதிர்பாராத காரியம். இப்பொழுது யூதர்களுக்கு முதலாவதாக வெளிப்படுத்தப்பட்ட மீட்பரைக் காணும்படி, ஒரு யூதனல்லாதவனுடைய கண்கள் திறக்கப்பட்டதாக வாசிக்கிறோம். யூதர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு யூதனல்லாதவன் தேவனை மகிமைப்படுத்துகிறதைக் காண்கிறோம். பரலோகத்தில் நாம் எதிர்பாராத பலரைக் காணலாம். அனுதினமும் வேதம் வாசித்து, ஓய்வு நாள் தவறாமல் ஆலயம் செல்லும் சிலர் ஒருவேளை பரலோக்த்தில் அனுமதிக்கப்படாமல் இருக்கலாம். இது ஆண்டவர் கொடுக்கும் எச்சரிப்பு.  (மத்தேயு 7: 21- 23)          

ஜெபம்:

ஆண்டவரே, நான் உம்முடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கும்படி, உம்முடைய சித்தத்தின்படியே நடக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.