காலைத் தியானம் – செப்டம்பர் 27, 2022

லூக்கா 24: 1 – 12

அவர் இங்கேயில்லை, அவர் உயிர்த்தெழுந்தார்

உயிர்த்தெழுதல் இல்லையென்றால் இன்று கிறிஸ்தவர்கள் உலகில் இருந்திருக்க மாட்டார்கள். உயிர்த்தெழுதல் இல்லையென்றால் மரணத்தின் மேல் வெற்றி முழுமை பெற்றிருக்காது. உயிர்த்தெழுதல் இல்லையென்றால் கிறிஸ்துவின் மரணம் அர்த்தமற்றதாயிருக்கும். உயிர்த்தெழுந்த ஆண்டவர் எங்கும் இருக்கிறார். உன் பக்கத்திலும் இருக்கிறார். தூர இடத்திலிருக்கும் உனக்கு அருமையானவர்கள் பக்கத்திலும் இருக்கிறார். எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் இருப்பதற்காகவே அவர் உயிரோடெழுந்தார். அவரோடு அனுதினமும் நெருங்கி வாழ்ந்து அவருடைய பிரசன்னத்தை உணர்ந்து கொள்கிறவன் பாக்கியவான். (யோசுவா 1:5)          

ஜெபம்:

ஆண்டவரே, நீர் என்னோடு இருந்து என்னை விட்டு விலகாமலும், என்னைக் கைவிடாமலும் இரும். ஆமென்.