காலைத் தியானம் – செப்டம்பர் 28, 2022

லூக்கா 24: 13 – 24

இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்து போனார்

கவலையுடனும் கலக்கத்துடனும் நடந்து செல்லும் யாவருடனும் இயேசு இருக்கிறார். அவர்களுடனே அவரும் நடந்து செல்கிறார். தம் பிள்ளைகள் கவலைப்படுவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. நாம் அவரை அறிந்து கொள்ளாதபடிக்கு நம் கண்கள் மறைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவர் நம்மோடு சேர்ந்து நடந்து வருகிறார் என்பது உண்மை. இயேசுவினிடத்தில் உன் காரியங்கள் எல்லாவற்றையும் சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள். (1 பேதுரு 5: 7)                     

ஜெபம்:

ஆண்டவரே, என் பாரங்களையெல்லாம் உம் பாதத்தண்டை இறக்கி வைக்கிறேன். என்னைத் தேற்றி வழிநடத்தும். ஆமென்.