காலைத் தியானம் – செப்டம்பர் 29, 2022

லூக்கா 24: 25 – 35

வேத வாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டின பொழுது

வேதாகமத்தை வாசிக்கும்போது, கதைப் புத்தகம் வாசிப்பது போல வாசிக்கக் கூடாது.  வேத வசனங்களின் மூலம் இயேசு நம்மோடு பேசுகிறார். ஆகையால் வேத வாசிப்பும் தியானமும் மிக மிக முக்கியமானவை. நாம் வேதாகமம் வாசிக்கும்போது நமக்குத் தேவையான செய்தியை இயேசு கொடுக்கிறார். ஆகவே நம்முடைய காலைத் தியான முறையைக் குறித்து நாம் அதிகக் கவனமாக இருக்க வேண்டும்.  அதிகாலையில் எழுந்து வேதத்தைக் கருத்துடன் வாசித்து விட்டு, ஆண்டவரின் செய்திக்காக அமைதலாகக் காத்திருக்க வேண்டும். அப்போது ஆண்டவர் நம்மோடு பேசுவது நமக்குக் கேட்கும். (சங்கீதம் 1:2)                     

ஜெபம்:

ஆண்டவரே, வேத வசனங்கள் எனக்கு விளங்கும்படி அவற்றை விளக்கித் தாரும். நீரே என்னோடு பேசும். ஆமென்.