காலைத் தியானம் – செப்டம்பர் 30, 2022

லூக்கா 24: 36 – 53

நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் 

ஒருவன் கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும்தான் சாட்சியாக அறிவிக்கமுடியும். சீஷர்கள் இயேசுவைக் கண்டார்கள். இயேசுவின் பொன்மொழிகளைக் கேட்டார்கள். இயேசுவின் உறவை அனுபவித்தார்கள். ஆகையால் அவர்கள் சாட்சிகளாக இருக்க முடிந்தது. நீயும் இயேசுவுக்கு சாட்சியாக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறாய். இயேசுவின் உறவை அனுபவித்து வருகிறாயா? நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் அனுபவித்தவைகளையும் குறித்து இயேசுவை அறியாதவர்களிடம் சொல்லி வருகிறாயா? (அப்போஸ்தலர் 1:8)                      

ஜெபம்:

ஆண்டவரே, நான் இவ்வுலகில் வாழும் சகல நாட்களிலும் உமக்கு சாட்சியாக வாழும் பாக்கியத்தைத் தந்தருளும். ஆமென்.