யோவான் 1: 40 – 51
மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்
மேசியாவைக் கண்டவர்கள் அதைக் குறித்து பிறரிடத்தில் கூறுகிறார்கள். அந்திரேயா பேதுருவுக்கு சொல்கிறான். பிலிப்பு, நாத்தான்வேலுக்குச் சொல்கிறான். மேசியாவைப் பற்றிய செய்தி பரவுகிறது. நீ இயேசுவோடு நெருங்கிய உறவு வைத்திருக்கிறாயா? வைத்திருந்தால் அவரை நன்றாக அறிந்திருப்பாய். இயேசுவை நன்றாக அறிந்த ஒருவன் எப்படி சும்மாயிருக்க முடியும்? நீயும் இயேசுவைப் பற்றி பிறரிடம் கூறுகிறாயா? இயேசுவே மேசியா அல்லது இரட்சகர் என்பதை அறியாத ஜனங்கள் கோடிக்கணக்கானோர் இன்றும் இந்தியாவில் உண்டு. கண்டு கொண்டதைப் பிறருக்குச் சொல்லாமல் இருப்பதும் குற்றமாகும். (2 இராஜா 7: 9)
ஜெபம்:
ஆண்டவரே, உம்மைப் பற்றி அறிவிக்க எதிர்ப்புகள் வந்தாலும், துன்பங்கள் வந்தாலும், என் கடமையைச் செய்ய எனக்கு பெலன் தாரும். ஆமென்.