காலைத் தியானம் – அக்டோபர் 07, 2022

யோவான் 3: 1 – 8

ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் 

                           ஜலத்தினால் (தண்ணீரினால்) பிறப்பதும் ஆவியினால் பிறப்பதும் சுத்திகரிப்பைக் குறிக்கின்றன. தண்ணீர், சுத்திகரிப்பின் அடையாளம். யோவான்ஸ்நானன் தண்ணீரில் ஞானஸ்நானம் கொடுத்தது சுத்திகரிப்பின் அடையாளம். ஆவியினால் பிறப்பது மறுபடியும் பிறப்பதைக் குறிக்கின்றது. நாம் சுத்திகரிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவரால் ஆட்கொள்ளப்படவில்லையென்றால், தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது. முதலாவதாக சுத்திகரிக்கப்பட வேண்டும். பின்பு சுத்திகரிக்கப்பட்ட நிலையில் நிலைத்திருக்க வேண்டும். சேற்றில் விழுந்து விடக்கூடாது. ஆவியானவர் நம்மை முற்றிலுமாய் ஆட்கொள்ள ஒப்புக்கொடுத்தால் மாத்திரமே பரிசுத்தமாக நிலைத்திருக்க முடியும். (எசக்கியல் 36: 25, 26)               

ஜெபம்:

ஆண்டவரே, பாவியாகிய என்னைக் கழுவி, என்னை சுத்தமாகக் காத்துக் கொள்ளும். ஆமென்.