காலைத் தியானம் – அக்டோபர் 09, 2022

யோவான் 3: 22 – 36

அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் 

                           யோவான் முந்தி வந்து, ஞானஸ்நானம் கொடுத்து, சீஷர்களைச் சேர்த்து, பெயரும் புகழும் பெற்று, வல்லமையாய் ஊழியம் செய்து கொண்டிருந்தார். அதற்குப் பின் வந்த இயேசு, யோவானை விட அதிகப் புகழ் பெற்றதைக் கண்டு யோவானின் சீடர்கள் சிலர் வருத்தப்பட்டார்கள். யோவான் வருத்தப்படவில்லை. அவரிடம் விசேஷமான ஒரு தாழ்மையைக் காண்கிறோம். இயேசுவுக்கு முதலிடம் கொடுக்கப்படவேண்டும் என்ற நிலையில் உறுதியாக இருந்தார். இன்று ஆண்டவருடைய அருட்பணியில் ஈடுபட்டிருக்கும் அநேகர், வெற்றிகளைக் கண்டவுடன் இயேசுவுக்குக் கொடுக்கவேண்டிய முதலிடத்தைத் தங்கள் ஊழியத்துக்கும், ஊழியத்தில் காணும் வெற்றிகளுக்கும் கொடுத்துவிடுகிறார்கள். ஆண்டவரைவிட தங்கள் வெற்றிகளுக்கு முதலிடம் கொடுக்கும் ஊழியர்களைக் குறித்து கவனமாயிருங்கள்.              

ஜெபம்:

ஆண்டவரே, தாழ்மையுள்ள இருதயத்தை என்னில் நிலைநாட்டியருளும். ஆமென்.