காலைத் தியானம் – அக்டோபர் 12, 2022

யோவான் 4: 25 – 38

நீங்கள் அறியாத ஒரு போஜனம் 

                           அறியப்படாத கிறிஸ்து! அறியப்படாத ஜீவ தண்ணீர்! அறியப்படாத தொழுதுகொள்ளும் முறை! அறியப்படாத சுத்திகரிப்பு! அறியப்படாத போஜனம்! நமது அறியாமையின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. சரீர தேவையை நிறைவு செய்யக்கூடிய போஜனம் நம் எல்லாருக்கும் தெரியும். தேவனுடைய சித்தத்தை அறிந்து, அதன்படி செய்து முடிப்பது அதைவிட மேலான நிறைவைத் தரக்கூடிய போஜனம் என்கிறார் இயேசுகிறிஸ்து. இந்த போஜனத்தை நீ அறிவாயா? தேவனுடைய சித்தம் பூலோகத்தில் நிறைவேற்றப்படுவதில் உன் பங்கு என்ன? (மத்தேயு 4:4)              

ஜெபம்:

ஆண்டவரே, உமது சித்தத்தை நிறைவேற்றும்படியாக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்துள்ள அநேக ஊழியர்களுக்காக உம்மைத் துதிக்கிறேன். உமது சித்தத்தை நிறைவேற்றும் தூய பணியில் என்னையும் உபயோகித்தருளும். ஆமென்.