காலைத் தியானம் – அக்டோபர் 16, 2022

யோவான் 5: 24 – 32

அவன் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டு இருக்கிறான்        

                           சரீர ஜீவன் (biological life) எல்லாருக்கும் உண்டு. விலங்குகளுக்கும், மரம், செடி, கொடிகளுக்கும்கூட இந்த சரீர ஜீவன் உண்டு. ஆனால் அதற்கும் மேலான ஜீவன் ஒன்று மனிதனுக்கு உண்டு. அது சரீர மரணத்திற்கு பின்னும் நீடித்திருக்கும் நித்திய ஜீவன். நித்திய ஜீவன் என்பது தேவனோடு சதாகாலங்களிலும் வாழும் வாழ்க்கை. இயேசுவை, நாம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட உடனேயே இந்த நித்திய வாழ்க்கை (புதிய வாழ்க்கை) ஆரம்பித்து விட்டது. நாம் சரீரப் பிரகாரமான மரணத்தைக் கடந்துதான் செல்வோம். சரீர மரணத்துக்குப் பின்னும் தொடர்ந்து இயேசுவோடு நித்தியமாய் வாழ்வோம் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வாழ்க்கைதான் இன்பமானது. பரிபூரணமானது. அதைக் கொடுக்கதான் இயேசு இவ்வுலகிற்கு மனித உருவேற்று வந்தார். (யோவான் 10: 10; 15: 6)                

ஜெபம்:

ஆண்டவரே, மகிழ்ச்சியான நித்திய ஜீவனை எனக்குக் கொடுத்திருப்பதற்காக நன்றி. இன்னும் நித்திய அழிவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் அநேகருக்காக உம்மிடம் மன்றாடுகிறேன். அவர்கள் இருதயங்களில் கிரியை செய்து, அவர்களையும் மீட்டுக் கொள்ளும். ஆமென்.