காலைத் தியானம் – அக்டோபர் 17, 2022

யோவான் 5: 33 – 47

நான் செய்து வருகிறதுமான கிரியைகளே என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறது

                           யோவான் இயேசுவைக் குறித்து சொன்ன சாட்சியை, அநேக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மோசேயின் சாட்சியையும் ஏற்றுக்கொள்ளவில்லை (உபாகமம் 18: 15). வேத வசனங்களின் சாட்சியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவைகள் எல்லாவற்றையும்விட என் கிரியைகளே என் பிதா என்னை அனுப்பினார் என்பதற்கு சாட்சி என்று இயேசு கூறுகிறார். இயேசுவின் கிரியைகள் பிதாவின் சித்தத்தை விட்டு கொஞ்சமும் விலகாத கிரியைகள். பிதாவை மகிமைப்படுத்துகின்ற கிரியைகள். உன் கிரியைகள் எப்படிப்பட்டவை? அவைகள் சொல்லும் சாட்சி என்ன? நாம் கிறிஸ்துவின் பிள்ளைகள் என்றால், நம் கிரியைகளும் அதற்கு சாட்சியாக இருக்க வேண்டும். (மத்தேயு 7:16-20)                

ஜெபம்:

ஆண்டவரே, என் கிரியைகள் எப்பொழுதும் உம் சித்தத்தை விட்டு கொஞ்சமும் விலகாதவைகளாக இருக்கட்டும். ஆமென்.