காலைத் தியானம் – அக்டோபர் 18, 2022

யோவான் 6: 1 – 13

இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்கள் எங்கே கொள்ளலாம்?

                           ஐயாயிரம் பேருக்கு ஆகாரம் கொடுக்க என்ன செய்யவேண்டும் என்பதற்கான விடையை இயேசு கொடுக்கவில்லை. கேள்வியைக் கேட்கிறார். தம்முடைய சீஷர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார். மலையைப் போன்ற பிரச்சனைகள் வந்தாலும் மலைக்கவேண்டாம். பிரச்சனைகளை உன் சுய அறிவினாலும், உன்னிடமுள்ள செல்வத்தினாலும் தீர்த்து விட முடியாது. உன் தேவனை நோக்கி உன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தால், அவர் வழி நடத்துவார் என்பதே அந்த பயிற்சி. அதே சமயம், ஆண்டவர் சீஷர்களிடம் இருப்பதைக் கொண்டு வரச் சொல்வதையும் கவனியுங்கள். பிரச்சனைகளைத் தீர்ப்பதில் நமக்கும் ஒரு பங்கு உண்டு.  பிரச்சனைகளுக்கு தீர்வு உன் அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருந்தால், பிலிப்புவைப் போல, என்னால் என்ன செய்ய முடியும் என்று சொல்லி சும்மாயிருக்க வேண்டாம். அந்திரேயாவைப் போல, உன்னிடம் உள்ளதை ஆண்டவரிடம் கொடு. அவர் ஆசீர்வதித்து வழி நடத்துவார்.                

ஜெபம்:

ஆண்டவரே, என் பிரச்சனைகள் எனக்குதான் மிகப்பெரியவை.  அவற்றை உம் பாதத்தண்டை வைத்துவிட எனக்கு ஞானத்தைத் தாரும். ஆமென்.