காலைத் தியானம் – அக்டோபர் 19, 2022

யோவான் 6: 14 – 26

இயேசுவைத் தேடிக் கொண்டு கப்பர்நகூமுக்கு வந்தார்கள்

                           மக்கள் இயேசுவைத் தேடிச் சென்றது நல்லது தான். ஆனால் எதற்காக அவரைத் தேடிச் சென்றார்கள்? சரீர சம்மந்தப்பட்ட, தற்காலிகமான நன்மைகளை நாடியே அவரைத் தேடிச் சென்றார்கள். தம் கிரியைகள் மூலமாக, அவர் பிதாவினாலே அனுப்பப்பட்ட தேவனுடைய குமாரன் என்பதை வெளியப்படுத்திய பின்னும் மக்கள் தற்காலிகமான நன்மைகளையே நாடினர். இது ராஜாவால் விருந்துக்கு அழைக்கப்பட்ட ஒரு குடிமகன், ராஜாவிடம் எனக்கு பத்து ரூபாய் கொடுத்தால் போதும்; வேறு ஒன்றும் வேண்டாம் என்று சொல்வது போல இருக்கிறது.  நீ உன் ஆண்டவரிடம் கேட்பது எப்படிப்பட்டவைகள்?  (மத்தேயு 6: 31-33)                

ஜெபம்:

ஆண்டவரே, மேலானவைகளையே நாடும்படி என் இருதயத்தை உயர்த்தியருளும். ஆமென்.